Home இலங்கை அரசியல் இலங்கை வந்தடைந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வந்தடைந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

0

Courtesy: Chandana

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா(yoko kamikawa) நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு

அத்துடன், இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் இந்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே யோகோ கமிகாவாவின் இலங்கைக்கான பயணத்தின் முக்கிய நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/japanese-foreign-minister-arrived-in-sri-lanka-1714806685

NO COMMENTS

Exit mobile version