Home இலங்கை சமூகம் இலங்கையில் பேரழிவின் பின்னர் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய உதவி

இலங்கையில் பேரழிவின் பின்னர் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய உதவி

0

நவம்பர் மாத இறுதியில் இலங்கையை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத்
தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர மானியத்தை
வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஹிமிட்சு மொடேகி(Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய அன்றாடத் தேவைகள் உட்பட சர்வதேச
உதவி நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த மானியம்
பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் நிவாரண மருத்துவக்குழு

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளின் விரைவான மீட்பு மற்றும் மறுகட்டமைப்பை
உறுதி செய்வதற்காக ஜப்பான் நீண்டகால நண்பரான இலங்கைக்கு தடையற்ற ஆதரவை
தொடர்ந்து வழங்கும் என்றும் மொடேகி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்
கூறியுள்ளார்.

இரண்டு வார காலப்பகுதியில் சுமார் 1,250 மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய பின்னர்
ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக்குழு இலங்கையிலிருந்து திரும்பியதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version