Home விளையாட்டு ஐ.சி.சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற இந்தியர்

ஐ.சி.சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற இந்தியர்

0

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (international cricket council) தலைவராகப் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜெய் ஷா (Jay Shah) நேற்றையதினம் (01) ஐ.சி.சி. தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனாவார். 

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை

ஜெய் ஷா  2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றி நேற்று (01) முதல் ஐ.சி.சி. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version