ஜெயம் ரவி
ஜெயம் ரவி, ஹேட்டர்ஸ் இல்லா ஒரு நடிகராக வலம் வருபவர்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஜெயம் படம் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை தொடங்கியவருக்கு நிறைய வெற்றிப் படங்கள் அமைந்தது.
கடைசியாக காதலிக்க நேரமில்லை வெளியானது, இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்திருந்தார்.
ஆனந்தி அக்கா திருமணத்தில் வந்த புது சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, Genie, தனி ஒருவன் 2 போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
இலங்கை
படங்களை தாண்டி ஜெயம் ரவி நிறைய நிகழ்ச்சிகள் செல்வது என பிஸியாக உள்ளார். அண்மையில் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் இலங்கை பயணம் செய்துள்ளார்.
சுற்றுலா எல்லாம் இல்லை, அவர்கள் இருவரும் இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளனர்.
பாடகி கெனிஷாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடத்துவதற்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
