Home இலங்கை அரசியல் நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

நீதிமன்றில் முன்னிலையான ஜீவன் தொண்டமான்

0

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த குழு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளது.

இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

சீ.சி.ரி.வி காட்சிகளை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக சட்டத்தரணி பெருமாள் ராஜதுரையும், களனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் சார்பாக சட்டத்தரணி பாலித்த சுபசிங்க மற்றும் சட்டத்தரணி சுரேஷ் கயான்  ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version