Home இலங்கை சமூகம் யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

0

யாழ்ப்பாணத்தில் செவ்வந்திக்கு உதவிய “ஜே.கே.பாய்” என்பவரே நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையின் பின்னர் செவ்வந்தி நான்கு நாட்கள் மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று அங்கு மூன்று கிழமைகள் தங்கியபின் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்காக செவ்வந்திக்கு ஜே.கே.பாய் உதவி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர் மூலமாகவே செவ்வந்திக்கு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே பணம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நேபாளத்தில் போலி செவ்வந்தி ஒருவரை தங்கவைத்துவிட்டு உண்மையான செவ்வந்தியை நாடு கடத்தும் திட்டமும் இந்த குற்றக் கும்பலுக்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்ற கும்பலை முடக்க விசாரணை அதிகாரிகள் நேபாளத்தில் மேற்கொண்ட நகர்வுகளை விளக்குகிறது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி….

https://www.youtube.com/embed/C0-NGbmgkgE

NO COMMENTS

Exit mobile version