Home இலங்கை சமூகம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

0

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் செயலியில் போலித் தகவல்கள் பகிரப்படுவது குறித்து அவதானமாக இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

வட்சப்பில் பகிர்வு…  

தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் போன்றன தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எவ்வித அறிவிப்புகளையும் விடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், பகிரப்படும் போலி தகவல் குறித்து ஆராய்வதற்காக பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க கூறியுள்ளார். 

எனவே, தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு பரப்படும் இணையதளங்களுக்குள் பிரவேசிக்கவோ, அவற்றை பகிரவோ வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version