Home அமெரிக்கா தீவிர சிகிச்சையில் பைடன்.. உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

தீவிர சிகிச்சையில் பைடன்.. உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ள நிலையில் நோய் சற்று தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு உடலில் சில அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரது புரோஸ்டேட்டில் ஒரு சிறிய முடிச்சு இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலைமை குறித்த நோயின் மிகவும் தீவிரமான வடிவம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருத்தம் தெரிவித்த ட்ரம்ப்.. 

அத்துடன், ஒன்பது க்ளீசன் மதிப்பெண் என்பது அவரது நோய் “உயர் தர வகை” அதாவது தீவிர நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புற்றுநோய் செல்கள் விரைவாக பரவக்கூடும் என்று பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், பைடனின் நோய் நிலைமை குறித்து செய்தி வெளியான பிறகு, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், தானும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி கேள்விப்பட்டு வருத்தமடைந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பைடனின் நிர்வாகத்தில் பணியாற்றிய முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் பைடனின் உடல் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version