Home இலங்கை சமூகம் உயிராயுதங்களான ஊடகபோராளிகளுக்கான “ஊடகர் எம் இனத்தின் காவலர்” என்ற நினைவாலயம்..!

உயிராயுதங்களான ஊடகபோராளிகளுக்கான “ஊடகர் எம் இனத்தின் காவலர்” என்ற நினைவாலயம்..!

0

பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் முகமாக றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நேற்றையதினம்(2025.12.14.) மறைந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

ஊடகம் என்ற பெருங்கனவுக்காய் தங்களை அகுதியாக்கிய ஒரு காலத்தின் மனிதர்களை நினைவாலயம் எழுப்பி நினைவேந்தி துதிப்பதில் பேருவகை கொள்கின்றோம்.

இந்த தேசம் தனக்கான நீண்ட பயணத்தில் போற்றுதற்குரிய மிகப்பெரிய விலையை தன் தேசிய உரிமைக்காக தியாகித்துள்ளது.

பெருங்கனவை சுமந்து தேசிய லட்சியத்திற்காய் வாழ்ந்த மனிதர்களை இறப்பு ஒருபொதும் மக்களிடத்தில் இருந்து மறைத்து விடாது என்பார்கள்.

அப்படியே எமது கடந்தகாலத்திலிருந்த கதாநாயகர்களும் இந்த பெருநிலத்தில் விதையாகி விருட்சமாகியுள்ளார்கள்.

அந்தவகையில் ஊடகத்துறையும் தன்பங்கிற்கு மிகப்பெரும் விலையை கொடுத்துள்ளது.

35ற்கும் மேற்பட்ட ஊடகபோராளிகளை உயிராயுதங்களாக இந்த பணியில் அர்ப்பணித்திருக்கின்றது.இந்த அழியா நினைவேடுகளை தந்த அவர்களை நாம் வணங்குகின்றோம்.

அந்தபணியின் முதற்கட்டமாக 16 ஊடகவியலாளர்களுக்கான சிலைகள் “ஊடகர் எம் இனத்தின் காவலர்” என்ற நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வை முழுமையாக கீழுள்ள காணொளியில் காணலாம்…

NO COMMENTS

Exit mobile version