Home இலங்கை சமூகம் வவுனியாவில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்

வவுனியாவில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்

0

மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா ஊடக
அமையத்தால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவுதினம், நேற்றையதினம் (19.10.2024) நடாத்தப்பட்டுள்ளது.

அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமரர் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு ஒளி தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் 

குறித்த நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்
பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/journalist-nimalarajan-s-memorial-day-1729380038

NO COMMENTS

Exit mobile version