Home சினிமா தக் லைப் படுதோல்வி.. கமல் மனநிலை என்ன? ஸ்ருதி ஹாசன் பேட்டி

தக் லைப் படுதோல்வி.. கமல் மனநிலை என்ன? ஸ்ருதி ஹாசன் பேட்டி

0

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து இருந்த தக் லைஃப் படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு வந்த நிலையில் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.

ஸ்ருதி பேட்டி

இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் தக் லைப் தோல்விக்கு பிறகு கமல் மனநிலை எப்படி இருக்கிறது என கூறி இருக்கிறார்.

இந்த தோல்வி அவரை சுத்தமாக பாதிக்கவில்லை.அவர் எப்போதும் தனது எல்லா பணத்தையும் சினிமாவில் தான் திருப்பி போடுவார். பணத்தை கொண்டு இரண்டாவது வீடு, மூன்றாவது கார் என அவர் வாங்க விரும்புவதில்லை. எல்லாமே சினிமாவுக்குள் தான் போகிறது.

“மக்கள் நினைப்பது போல இந்த நம்பர் கேம் அவரை பாதிப்பது இல்லை” என ஸ்ருதி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version