ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தலானது இன்று(25.04.2024) மாலை பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் ஊடகவியலாளரும்
சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம் – தவிக்கும் பெற்றோர்
யாழ். குடாநாட்டின் நிலைமைகள்
இதன்போது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம்
ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகை சுடரும் ஏற்றி
வைக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டடுள்ளது.
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் இறுதிக்கட்ட யுத்தத்தின் பொழுது யாழ்.குடா நாட்டிற்கான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ
கட்டுபாட்டிற்குள் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றிய
நிலையில் யாழ். குடாநாட்டின் நிலைமைகளை பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக
வெளிக்கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில் டகவியலாளர் பொன்ராசா ,வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள்,
மாணவர்கள் , ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள் ,பொன்னாலை பிரதேச மக்கள் என
பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கையில் விமர்சனம் வெளியிட்ட ஈரான் ஜனாதிபதி
இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |