Home இலங்கை சமூகம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம்

உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம்

0

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவு தினமானது, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களால் இன்று (30) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமுடைய உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிசெலுத்தப்பட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் 

தர்மரத்தினம் சிவராம் என்ற இயற்பெயர்கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராம், தராகி என்ற புனைபெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்.

கடந்த 2005 ஆம்ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version