Home இலங்கை சமூகம் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

0

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்(
Victor Ivan) இன்று காலமானார்.

1971ஆம் ஆண்டின் ஜே.வி.பி. முதலாவது கிளர்ச்சியில் லொகு அதுல எனும் புனைப் பெயரில் பங்குகொண்ட விக்டர் ஐவன், அதன் பின்னர் 1985களில் ராவய எனும் சிங்கள புலனாய்வு வார இதழொன்றை ஆரம்பித்திருந்தார்.

இலங்கையின் முதலாவது புலனாய்வு வார இதழான ராவய வார இதழின் வௌியீட்டாளராகவும், ஆசிரியராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

விக்டர் ஐவன்

அக்காலகட்டத்தில் பல்வேறு அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகளை மாத்திரமன்றி நீதித்துறை சார் நபர்களின் மோசடிகளையும் கூட துணிச்சலுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.

அதன் பின் ராவய பத்திரிகை வௌியீடு நிறுத்தப்பட்ட பின்னரும், அவர் இலங்கையின் அரசியல் மற்றும் ஊடகத்துறையில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய நபராக மாறியிருந்தார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்குப் பதிலாக பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயத்தில் அவர் ஆர்வமுடன் செயலாற்றிக் கொண்டிருந்தார்.

அதற்காக கோட்டாபய, ரணில், அநுர குமார ஆகிய மூன்று ஜனாதிபதிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று சுகவீனம் மற்றும் முதுமை காரணமாக தனது 75வது வயதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version