யாழில் ஊடகவியலாளர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (03) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது படுகொலை செய்ப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு
இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும்
ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/yux77SOo4nc
