Home இலங்கை சமூகம் யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்

யாழில் போராட்டத்தில் குதித்த ஊடகவியலாளர்கள்

0

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு
நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் ஊடகவியலாளர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்துக்கு முன்பாக மாலை 3 மணியளவில்
இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்ப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு
இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும்
ஊடகவியலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version