மன்னார் மடு தேவாலயம் குண்டு தாக்குதலுக்கு இலக்காகிவிட்டதாக இரவு 10:35 மணியளவில் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மடு தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 உடல்கள் சிதறி கிடப்பதாகவும் மேலும் 35 பேர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காலம் சென்ற ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியதாகவும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும், உடனடியாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கூறினார்.
மறுநாள் காலை உச்சக்கட்ட போர் மடு தேவாலயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆயரையும் அழைத்து சென்று உடல்கள் அனைத்தையும் அவர்களின் உறவுகளிடம் ஒப்படைத்துவிட்டு விசாரணை நடத்தி அந்த வழக்கையும் முடித்து வைத்தேன் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு…
