இலங்கையின் (Sri Lanka) மேல் நீதிமன்ற சிரேஸ்ட நீதிபதி ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரிக்க நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், நீதியரசர் ஜனக் டி சில்வாவை உயர்நீதிமன்றம் விசாரணைக்காக நியமித்துள்ளது.
நீதித்துறை சேவை ஆணையகத்தின் தலைவராக செயற்படும் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால், நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
குறித்த மேல் நீதிமன்ற சிரேஸ்ட நீதிபதி மீது 477 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் குறித்த குற்றங்கள் தொடர்பில் தமது பதிலை வழங்கியுள்ளார்.
மேலும் ஒரு நீதிபதி மீது விசாரணை
இந்தநிலையிலேயே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கையில் பல நீதிவான்கள் மற்றும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
