Home ஏனையவை வாழ்க்கைமுறை ஒரே வாரத்தில் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு பானம் போதும்!

ஒரே வாரத்தில் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு பானம் போதும்!

0

முடியை அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்க்க ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது.

ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

முடி உதிர்விற்கு தீர்வு என பயன்படுத்தும் இரசாயன கலவைகள் முடியை மேலும் பாதிக்கலாம்.

எனவே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தலைமுடிக்காக நேரம் செலவிடமுடியாமல் இருக்கும்.

எனவே அதற்கு இலகுவான வழி என்னவென பார்க்கலாம்.

அடர்ந்த நீளமான கூந்தல்

நெல்லிக்காய்- 4
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- 2 கப்
எலுமிச்சை-½ எடுத்துக்கொள்ளவும்.

நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் அரைக்கவும்.

பின்னர், இதனை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

இதில் எலுமிச்சை சாறை பிழிந்துக்கொள்ளலாம்.

இந்த பானத்தை தினமும் காலையில் தொடர்ந்து குடித்து வர சிறந்த பலன் கிடைக்கும்.

NO COMMENTS

Exit mobile version