Home விளையாட்டு சமரி அத்தபத்துவிற்கு மீண்டும் ஐசிசி வழங்கிய அங்கீகாரம்

சமரி அத்தபத்துவிற்கு மீண்டும் ஐசிசி வழங்கிய அங்கீகாரம்

0

கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கணைக்கான விருதை மூன்றாவது முறையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து (Chamari Athapaththu) வென்றுள்ளார்.

34 வயதான சமரி அத்தப்பத்துவிற்கு இது மூன்றாவது ஐசிசி மகளிர் வீராங்கனைக்கான விருதாகும்.

அந்தவகையில், ஐசிசியின் (ICC) கடந்த மாதத்தின் சிறந்த வீராங்கனையாக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக கூறியுள்ளார்.

நேர்மறையான செய்தி

அத்துடன், தங்கள் நாட்டிற்காக விளையாட விரும்பும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இவ்வகையான அங்கீகாரம் ஒரு நேர்மறையான செய்தியை அனுப்பும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12 மாதங்களில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20I தொடர் வெற்றிகள், ஆசிய மகளிர் ரி20 கிண்ணம் உட்பட அவரது தலைமையில் இலங்கை பல மைல்கற்களை எட்டியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version