Home இலங்கை சமூகம் பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

0

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (Lanka Private Bus Owners’ Association) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பேருந்து கட்டண திருத்தம் ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  (Gemunu Wijerathne) இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணங்களை திருத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வருடாந்த கட்டண திருத்தம் வழக்கமாக ஒவ்வொரு ஜூலை மாதமும் நடைமுறைக்கு வரும் எனவும் ஆனால் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அதை தாமதப்படுத்த சங்கத்திற்கு விருப்புரிமை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சங்கமாக, பொறுப்பான அமைச்சர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, கட்டண திருத்தங்களை நாங்கள் முன்னர் ஒத்திவைத்துள்ளதாகவும் இந்த முடிவு தொடர்பாக மற்ற பேருந்து சங்கங்களுடன் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்தார்.

இதேவேளை மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் மே மாத விலைத்திருத்தமே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version