Home இலங்கை சமூகம் ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை: அதாவுல்லா வலியுறுத்து!

ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை: அதாவுல்லா வலியுறுத்து!

0

ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எம்.அதாவுல்லா (A. L. M. Athaullah) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றின் இன்றைய (24) அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ( Pavithra Wanniarachchi) வெளியிட்டிருந்தார்.

கொரோனா பெருந்தொற்று

கொரோனா (Corona) பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம்.

ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.

இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன்.

எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version