Home இலங்கை அரசியல் ஜே.வி.பியினர் மீண்டும் கலவர காலப்பகுதியை உருவாக்க முயற்சி : மனுஷ தெரிவிப்பு

ஜே.வி.பியினர் மீண்டும் கலவர காலப்பகுதியை உருவாக்க முயற்சி : மனுஷ தெரிவிப்பு

0

Courtesy: Ministry of Labour & foreign Emp

இசைக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் 1988-1989 போன்றதொரு சூழலை மீண்டும் உருவாக்க ஜே.வி.பி முயற்சிப்பதாக ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலான ஆலோசகர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 நேற்று (08.09.2024) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டங்கள் 

மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் நேற்று காலியில் பிரசாரம் செய்தோம். பதினான்காயிரம் இடங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது.

காலியில் வீடு வீடாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் செய்ய கெஸ்பேவ டிப்போவில் இருபத்தைந்து பேருந்துகள் முன்பதிவு செய்து அதில் பொது மக்களை ஜே.வி.பியினர் அழைத்து வந்துளளனர்.

ஜே.வி.பியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் என்று கூறிக்கொண்டு நாடு முழுவதிலும் உள்ள மக்களை அழைத்து வந்து காலியில் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறுதான் அவர்களால் போலி மக்கள் அலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே காலியில் இருப்பவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதனை ஊடகங்கள் ஆராய்ந்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு

பிரபல இசைக்குழுவான மரியன்ஸ் இசைக்குழுவின் ரோசாலா ஒரு பாடலை மாற்றி பாடியுள்ளார். இதனால் அந்த இசைக்குழுவுக்கு மன்னிப்பு கேட்கும்படி அசச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு உண்மையைக் கூற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

வடக்கிற்குச் சென்று தென்னிலங்கை மக்கள் தேர்தலில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அதனை வடக்கில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

வடக்கு மக்கள் மாத்திரம் அந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் போது தென்பகுதி மக்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது தமக்கு தெரியாது எனவும் அச்சுறுத்துகின்றார்.

ஜே.வி.பி பேரணிக்கு சென்ற இராணுவ அதிகாரியை அச்சுறுத்தும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம். இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து மீண்டும் 88-89 போன்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அதன் மூலம் ஒரு பேரழிவை உருவாக்க பார்க்கின்றார்கள். இதை நாட்டு மக்கள் சிந்தனை செய்ய வேண்டும். இதுபோன்ற விடயங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version