Home உலகம் கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

0

ரஜினிகாந்த் நடிப்பில் 2016இல் வெளியான கபாலி திரைப்படத்தின் தெலுங்கு தயாரிப்பாளரான கே.பி.சவுத்ரி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (04.02.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நீண்டநேரமாக அவரது இல்லத்தின் கதவு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version