Home சினிமா 9 நாட்களில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

9 நாட்களில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

காதலிக்க நேரமில்லை

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் காதலிக்க நேரமில்லை படம் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவி யுடன் இணைந்து முதல் முறையாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வினய், யோகி பாபு, டி.ஜே. பானு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட, காதலிக்க நேரமில்லை படத்திற்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு கிடைத்தது.

வசூல் விவரம் 

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/kadhalikka-neramillai-movie-9-days-box-office-1737615925

NO COMMENTS

Exit mobile version