Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை வருமானமாக இலங்கைக்கு 1,360 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.

எனினும், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் ஊடாக 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியிருந்தது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்

அதற்கமைய இந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானம் 11.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் அதேவேளை, கடந்த ஆண்டின் மே மாதத்தில் அது 164.1 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

இதேவேளை, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பலாக இலங்கைக்குக் கிடைத்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 3,102.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டுப் பணவனுப்பல் வருமானம், இந்த ஆண்டில்  வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-s-tourism-revenue-drops-by-11-9-percent-1782107049

NO COMMENTS

Exit mobile version