Home இலங்கை சமூகம் அவிசாவளை – கஹவத்தை தொடருந்து சேவை : வெளியான தகவல்

அவிசாவளை – கஹவத்தை தொடருந்து சேவை : வெளியான தகவல்

0

அவிசாவளையில் (Avissawella) இருந்து கஹவத்தை (Kahawatta) வரையிலான முன்மொழியப்பட்ட  தொடருந்து பாதையின் நிர்மாணத்தை விரைவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதித் தலைமைப் பொறியாளர் பி.ஜே. பிரேமதிலக்க இரத்தினபுரி (Ratnapura) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உரையாற்றும் போதே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பாதை

இந்த தொடருந்து பாதையின் முதல் கட்டம் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டம் இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையிலும், மூன்றாம் கட்டம் எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ மத்தள ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையிலும் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரேமதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான பகுதியின் அவிசாவளையிலிருந்து குருவிட்ட வரையில் தற்போது அளவீடுகள் முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version