கைதி
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட படமாகவும், பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகவும் கைதி அமைந்தது.
எந்த ஒரு கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் கதையையும் திரைக்கதையையும் நம்பி லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி அதன் மூலம் வெற்றியை கண்டார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
VJ அஞ்சனாவா இது.. சொக்க வைக்கும் அழகில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
எப்போது?
இந்நிலையில், கைதி 2 படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “கைதி 2 படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம்.
இதற்கிடையில் கார்த்தி டாணாகாரன் பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும். அதன் பின், கைதி பட 2 – ம் பாகம் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
