Home சினிமா தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. நடிகர் கலையரசன் அதிர்ச்சி புகார்

தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. நடிகர் கலையரசன் அதிர்ச்சி புகார்

0

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்ப்பட்டா பரம்பரை போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் கலையரசன்.

அவர் பேட்டிகளில் பேசும்போது கூட தான் இயக்குனர் ரஞ்சித்துக்கு மிக நெருக்கம் என்றும், நான் எதை செய்தாலும் ரஞ்சித்தை கேட்டுவிட்டு தான் செய்வேன் எனவும் கூறி இருக்கிறார்.

கலையரசன் அடுத்து ட்ரெண்டிங் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் விழாவில் பேசும்போது அவர் ஜாதி பற்றி பேசி இருக்கிறார்.

சினிமாவில் ஜாதி பார்கிறார்கள்

“தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமான அளவில் இருக்கிறது.”

“நான் இயக்குனர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பலரும் என்னை நடிக்க அழைக்க யோசிக்கிறார்கள்” என கலையரசன் கூறி இருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version