Home சினிமா கல்கி 2898 AD படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம்.. முழு விவரம் இதோ

கல்கி 2898 AD படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம்.. முழு விவரம் இதோ

0

கல்கி 2898 AD

நடிகையர் திலகம் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் நாக் அஸ்வின். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898 AD.

இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.

கல்கி 2898 AD படத்தின் ஹீரோவான பிரபாஸ் ரூ. 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

சம்பள விவரம்

கதாநாயகி தீபிகா படுகோன், வில்லனாக நடிக்கும் கமல் ஹாசன் மற்றும் முக்கிய ரோலில் நடிக்கும் அமிதாப் பச்சன் என மூவருக்கும் தலா ரூ. 20 கோடி சம்பளமாக வழங்கலாட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மற்றொரு கதாநாயகியான திஷா பாட்னிக்கு ரூ. 5 கோடி சம்பளமாம்.

மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளத்தை சேர்த்தால் பட்ஜெட்டில் ரூ. 250 கோடி சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர். அதே போல் இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறதாம்.  

Source: https://cineulagam.com/article/kalki-2898-ad-movie-celebrities-salary-details-1714282909

NO COMMENTS

Exit mobile version