Home சினிமா பிரம்மாண்ட படமான கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த கமல், அமிதாப் மற்றும் தீபிகா சம்பள...

பிரம்மாண்ட படமான கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த கமல், அமிதாப் மற்றும் தீபிகா சம்பள விவரம்… எத்தனை கோடி?

0

கல்கி 2898ஏடி

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க நேற்று வெளியான படம் கல்கி 2898 ஏடி.

பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன கல்கி உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

பல இடங்களில் முதல் நாளிலேயே ஆல்டைம் வசூல் சாதனை எல்லாம் செய்து வருகிறது.

சம்பள விவரம்

பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானியின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாசன்- ரூ. 20 கோடி
அமிதாப் பச்சன்- ரூ. 17 கோடி
தீபிகா படுகோனே- ரூ. 20 கோடி
திஷா பதானி- ரூ. 2 கோடி
ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு சரியானது என தெரியவில்லை. 

NO COMMENTS

Exit mobile version