மன்னார் – கள்ளியடி அருள்மிகு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக
பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நேற்று (22) காலை சுப முகூர்த்த வேலையில் விநாயகப் பெருமானுக்கும்
ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழா
அதனைத் தொடர்ந்து, தசமங்கள தரிசனம் எஜமான் அபிஷேகம், மகா
அபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றுள்ளன.
கும்பாபிஷேக பெருவிழாவை தொடர்ந்து 10 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கள்
நடைபெற்று பன்னிரெண்டாம் நாள் 108 சங்காபிஷேகம் இடம் பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
