Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்களிடம் கிழக்கு மக்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் போட்டியாளர்களிடம் கிழக்கு மக்கள் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

0

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை  தரமுயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடரும் தீர்வில்லா பிரச்சினையாகம்.

இந்த விவகாரம் இன்றுவரையில்  இழுப்பறியாகவே தொடர்கிறது.

கல்முனை வடக்கு உட்பட 22 உப பிரதேச செயலகங்களை தரமுயர்த்த 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

அதில் 21 உப பிரதேச  செயலகங்களை தரமுயர்த்திய அரசு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை மட்டும் 28 ஆண்டுகள் கடந்தும் தரமுயர்த்தாமல் வைத்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரம் விழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தும் சரியான இணக்கம் ஏற்படவேயில்லை.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேட்பாளர்கள் முன்வருவார்களா என்ற அங்கலாய்ப்புடன் குறித்த பிரதேச மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது,

மேலும் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய நாட்டின் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னடைவை எற்படுத்தும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது…

NO COMMENTS

Exit mobile version