Home இலங்கை குற்றம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது

0

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளராக (பதில்) கடமையாற்றும் செல்லத்துரை ரமேஷ் என்பவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

நீதிமன்றத்தில் வழக்கு
சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான
350கிராம் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதோடு, நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ்
தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version