Home சினிமா ரிலீஸ் ஆன தக் லைஃப், ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை படம் செய்துள்ள வசூல்.. இத்தனை...

ரிலீஸ் ஆன தக் லைஃப், ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?

0

தக் லைஃப்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது.

கன்னட மொழிப் பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்-மணிரத்னம் இணைந்துள்ள இப்படத்தில் சிம்பு, த்ரஷா, அபிராமி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா! இதோ பாருங்க

இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

ப்ரீ புக்கிங்

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் விவரம் வெளியாகியுள்ளது.

இதுவரை தக் லைஃப் படம் ரூ. 24 கோடி வரை ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version