சீரியல் நடிகை
சிறகடிக்க ஆசை சீரியலில், அருண் அம்மாவாக, சீதாவின் மாமியாராக நடித்து வந்தவர் தான் ராஜலட்சுமி.
சில மாதங்களுக்கு முன் இவர் காட்சிகள் இருந்தது, ஆனால் இப்போது இல்லை. இந்த தொடருக்கு முன் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் சமையல் கலைஞர்களில் ஒருவராக நடித்து வந்தார்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ
இந்த நிலையில் நடிகை ராஜலட்சுமி வீட்டில் தகராறு காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்.
கம்பம் மீனா
சீரியல் நடிகையின் மறைவு குறித்து அறிந்ததும் அவருடன் நடித்தவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் ராஜி குறித்து வருத்தமான பதிவு போட்டுள்ளார்.
உங்கள் மகளுக்கு பெரியவள் ஆன நிகழ்ச்சி உள்ளது, பத்திரிக்கை வைக்க வருகிறேன் என கூறினாயே அதற்குள் உயிரை விட்டுவிட்டாயே என மிகவும் சோகமான பதிவை போட்டுள்ளார்.
