உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் வரலாற்றில் 1000 ஓட்டங்களைக் கடந்த துடுப்பாட்ட வீரர்களில், அதிக சராசரியைக் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை அறிவித்துள்ளது.
கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட சராசரி 62.67ஆக காணப்படுகின்றது.
அதிக சராசரியைக் கொண்ட வீரர்கள்
இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 61.34 என்ற சராசரியில் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஹரி புரூக் 53.80 என்ற சராசரியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
அத்துடன் குறித்த வரிசையில் இங்கிலாந்து வீரர்களான ஜேமி ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
