Home இலங்கை அரசியல் சிஐடியின் அறிவிப்புக்கு பிறகு கம்மன்பில தாய்லாந்து பறந்தமைகான காரணம்!

சிஐடியின் அறிவிப்புக்கு பிறகு கம்மன்பில தாய்லாந்து பறந்தமைகான காரணம்!

0

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மனபில மேல்படிப்பு மேற்கொள்வதற்காகவே தாய்லாந்து சென்றதாக அக்கட்சியின் மத்திய குழுவின் பல உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் அறிக்கைகள் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலாய்வு திணைக்களம் கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிஐடி தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் மேல்படிப்பு

இந்த நிலையில், அவர் தாய்லாந்துக்கு சென்ற பின்னர் தனது சட்டத்தரணி மூலமாக தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள், உதய கம்மன்பிலவை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் தயாராகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (3) சந்தித்துள்ளனர்.

அதன்போது, ஊடகவியலாளர்கள் கம்மன்பிலவின் தற்போதைய இருப்பிடத்தைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் ஒருவர், கம்மன்பில ஒளிந்து கொண்டிருப்பதில்லை, வெளிநாட்டில் மேல்படிப்பு மேற்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version