Home சினிமா 7 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கங்குவா 

சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். கடந்த 7 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ய தவறிய காரணத்தினால், கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், படத்தின் வசூலும் சரிவை சந்தித்தது. முதல் நாள் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் அடிவாங்கியது.

வசூல் 

இந்த நிலையில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த கங்குவா படம், 7 நாட்களில் உலகளவில் ரூ. 97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/kanguva-7-days-box-office-1732157444

NO COMMENTS

Exit mobile version