கங்குவா படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. வரலாற்று பகுதி, தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் பகுதி என இரண்டும் படத்தில் இருக்கிறது.
படம் பான் இந்தியா ஹிட் ஆகும் என படக்குழு தீவிரமாக ப்ரோமொஷன் செய்தது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆன பிறகு படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வருகிறது.
அதிகாரபூர்வ வசூல்
இந்நிலையில் கங்குவா முதல் நாள் அதிகாரபூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் அறிவித்து இருக்கிறது.
முதல் நாளில் உலகம் முழுக்க 58.62 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என அறிவித்து உள்ளனர்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் படம் முதல் நாளில் 42.3 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. அதை விட 13 கோடி அதிகமாக வசூலித்து இருக்கிறது கங்குவா.
Source: https://cineulagam.com/article/kanguva-first-day-collection-official-box-office-1731678587
