Home சினிமா 9 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

9 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கங்குவா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்திக்கொண்டு, அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிப்பில் பட்டையை கிளப்புவார்.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும் உலகளவில் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் கூறி வந்தனர்.

வசூல் 

முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற கங்குவா படம், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்து. இந்த நிலையில், உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/kanguva-movie-9-days-box-office-1732329683

NO COMMENTS

Exit mobile version