Home அமெரிக்கா ட்ரம்பை கொல்ல சதி – ஈரானிடம் இரசாயன ஆயுதங்கள்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி

ட்ரம்பை கொல்ல சதி – ஈரானிடம் இரசாயன ஆயுதங்கள்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், “அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்.

அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது” என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..

Source: https://tamilwin.com/article/to-kill-trump-iran-chemical-weapons-israel-us-1783716483

NO COMMENTS

Exit mobile version