Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (21.10.2025)  இடம்பெற்றது.

அதன்படி, நேற்று (21.10.2025) மாலை 5 மணியளவில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் தலைவராக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் உப தலைவராக வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா தெரிவு செய்யப்பட்டார்.

தொகுதிக்கிளை தெரிவு

செயலாளராக வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ் மற்றும் உப செயலாளராக முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸூம் தெரிவு செய்யப்பட்டனர்.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கரும் பொருளாளராக தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில் நிர்வாக முக்கிய பொறுப்புக்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரம் தவிர்ந்த ஏனைய வட்டாரங்களுக்கு பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

குறிப்பாக எதிர்காலத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்கு சிறந்த பணியாற்றுவதே இப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version