Home சினிமா பைசன் பட பாணியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா.....

பைசன் பட பாணியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா.. குவியும் வாழ்த்துக்கள்

0

பைசன் 

தமிழகத்தை சேர்ந்த கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் எடுத்த திரைப்படம் பைசன் காளமாடன்.

கண்ணகி நகர் கார்த்திகா

தென் தமிழகத்தில் இருந்து பல போராட்டங்களை கடந்து கிட்டான் எப்படி வெற்றியடைந்தாரோ, அதே போல் தற்போது சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா என்பவர் ஆசிய அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

பஹ்ரைனில் நடைபெற்று வரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக விளங்கிய கார்த்திகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ்: திரை விமர்சனம்

குவியும் வாழ்த்துக்கள்

இயக்குநர் பா. ரஞ்சித் தனது வாழ்த்துக்களை கார்த்திகாவுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் மற்ற தமிழக வீராங்கனைகளுக்கும் அரசு பணியோடு கூடிய பரிசு தொகையை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version