Home சினிமா மாஸ் வசூல் வேட்டை செய்த காந்தாரா Chapter 1 மொத்தமாக செய்துள்ள வசூல்… Final கலெக்ஷன்

மாஸ் வசூல் வேட்டை செய்த காந்தாரா Chapter 1 மொத்தமாக செய்துள்ள வசூல்… Final கலெக்ஷன்

0

காந்தாரா

கடந்த 2022ம் ஆண்டு கன்னட மொழியில் தயாராகி பிரம்மாண்ட வெற்றியைக் கண்ட படம் காந்தாரா.

ரசிகர்களின் பேராதரவால் தொடர்ந்து ஓடிய இப்படம் உலக அளவில் ரூ. 683 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்தது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 30 நாடுகளுக்கும் மேலான இடங்களில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்பட வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1ஐ மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வெளியிட்டார்.

தெய்வங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான உறவையும், நில உரிமை பிரச்சினையையும் மையமாகக் கொண்ட கதை அமைப்பு, ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ. 803 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

தற்போது இப்படம் மொத்தமாக ரூ. 855 கோடி வரை மொத்தமாக வசூலித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version