Home இலங்கை சமூகம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

0

காலி (Galle) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் உபய பண்டார வலகாகொட (Ubhaya Bandara Warakagoda) குறிப்பிட்டுள்ளார்.  

Source: https://tamilwin.com/article/karapitiya-hospital-doctors-involved-in-strike-1730515614

NO COMMENTS

Exit mobile version