Home சினிமா பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி… பெரிதான லட்டு பிரச்சனை

பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி… பெரிதான லட்டு பிரச்சனை

0

லட்டு பிரச்சனை

மக்கள் அனைவருமே பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் கோவில் ஆந்திராவில் உள்ள திருப்பதி தான்.

அந்த திருப்பதியில் பெயர் போன ஒரு விஷயம் லட்டு, தற்போது அதனால் இப்போது ஒரு பிரச்சனை எழுந்திருப்பது நாம் அனவைருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மெய்யழகன்

அண்மையில் நடிகர் கார்த்தி தான் நடித்துள்ள மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரொமோஷனுக்காக ஆந்திரா சென்றிருந்தார். அங்கு அவரிடம் சிறுத்தை பட லட்டு வசனத்தை காட்டி தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தெளிவாக லட்டு தற்போது சென்சிட்டிங் விஷயம், அதனால் அதைப்பற்றி பேச வேண்டாம் என கூறியிருப்பார். இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் காதிற்கு செல்ல அவர் ஒரு பேட்டியில் கார்த்திக்கு கண்டனம் தெரிவித்தார்.

நடிகரின் டுவிட்

கார்த்தி சொன்னதில் எந்த தவறும் இல்லை என மக்கள் கருத்து கூறிவரும் நிலையில் மெய்யழகன் பட ஹீரோ அதிரடி டுவிட் போட்டுள்ளார்.

அதில் அவர், பவன் கல்யாண் சார் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வெங்கடேஷ்வராவின் பக்தனாக நான் எப்போதும் பண்பாட்டுடன் இருக்கிறேன் என பதிவு போட்டுள்ளார். அதற்கு கீழ் ரசிகர்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை, ஆனாலும் மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் என பதிவு செய்து வருகின்றனர். 

Source: https://cineulagam.com/article/karthi-apologise-tweet-for-this-big-issue-1727170948

NO COMMENTS

Exit mobile version