கொம்பன்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் கொம்பன். இப்படத்தில் லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா, ராஜ்கிரண், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் முத்தையாவை அனைவரும் கொம்பன் முத்தையா என அழைக்க தொடங்கினார்கள். அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று தந்தது படம் கொம்பன்.
நாளை வெளிவரவிருக்கும் காந்தா படத்தின் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் கார்த்தி கிடையாதாம், நடிகர் சூர்யா தானாம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் முத்தையா வெளிப்படையாக பேசியுள்ளார்.
“கொம்பன் படத்தின் கதையை நான் முதலில் சூர்யா சாரிடம்தான் கூறினேன். அவர், ‘இது எனக்கு செட்டாகுமா’ என்று யோசித்தார். அதன்பின், அது கார்த்தி சாரிடம் போனது. கார்த்தி சார் ஓகே சொல்லிவிட்டு, இது ‘பருத்திவீரன்’ மாதிரியே இருக்கும் என்று உணர்ந்தார். அதன்பின், ஸ்டில் ஷூட் எடுத்த பிறகுதான் அவருக்கு ஓகே ஆனது” என முத்தையா கூறியுள்ளார்.
