Home இலங்கை சமூகம் நாளை ஆரம்பமாகவுள்ள கச்சதீவு உற்சவம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை ஆரம்பமாகவுள்ள கச்சதீவு உற்சவம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

0

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (14)
ஆரம்பமாகவுள்ள நிலையில் நாளை மறுதினம் சனிகிழமை காலை திருநாள் திருப்பலி
யுடன் காலை 9 மணியளவில் திருவிழா நிறைவு பெறும் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்
ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

 யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் வெள்ளி-சனிக்கிழமைகளில்
இடம்பெறவுள்ளது.

வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள்
ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர்.

இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம்
பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த
யாத்திரையில் கலந்து கொள்கின்றனர். நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம்
கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version