கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் Gold Route மூலம் 124 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
Airport Gold Route பயன்படுத்தி 1900 பயணிகள் வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த நுழைவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
Gold Route
இந்த வருட இறுதிக்குள் பயணிகளின் எண்ணிக்கையை 2500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 165 பயணிகள் Gold Route பாதை பயன்படுத்தியுள்ளனர். மேலும் இது 2023 ஆம் ஆண்டில் 1078 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் 600க்கும் மேற்பட்ட பயணிகள் Gold Route பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Gold Route ஊடாக கட்டுநாயக்க விமானத்தில் சில மணிநேரம் தங்கியிருந்து தாய்லாந்து பயணித்தமை குறிப்பிடத்தக்கது.